2025 மே 02, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இருவர் திருமலையில் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சாம்பல்தீவிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆண்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டிராக்டர் வண்டியொன்றுடன் அதன் சாரதியும் மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 8 சோடி செருப்புக்களும் உலர் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இச்சந்தேக நபர்களிடம் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். (அமதோரு அமரஜீவா)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X