2025 மே 03, சனிக்கிழமை

சாரணர் சிலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை, கடற்படைத்தள வீதியில் குளக்கோட்டம் சிறுவர் பூங்காவிற்கு முன்னால் அமையப்பெறவுள்ள சாரணர் சிலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை சாரணர் சங்கத்தினால் நிர்மாணம் செய்யப்படவுள்ள இச்சிலைக்கான அடிக்கல்லினை திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா நாட்டி வைத்தார்.

இலங்கையில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவை முன்னிட்டு இச்சிலை அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட சாரணர் சங்கத்தின் ஆணையாளர் செ.பத்மசீலன், உதவி மாவட்ட ஆணையாளர்களான சி.சசிகுமார், த.சதீசன், இ.சத்தியராஜ், செயலாளர் செபஸ்தியான், பொருளாளர் சிவநாதன், உப தலைவர் ந.இரத்தினவடிவேல், உப செயலாளர் தம்பிப்பிள்ளை, நகரசபை உறுப்பினர் த.கௌரிமுகுந்தன், சாரணர் தலைவர்கள், சாரணர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • Parameswaran.S Friday, 13 July 2012 04:50 AM

    அமைக்கப்படவுள்ள சாரணர் சிலையின் மாதிரி படத்தினை வெளியிட்டால் பொது அபிப்பிராயத்தினை அறிந்து கொள்ள முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X