2025 மே 03, சனிக்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர் கொல்லப்பட்டமைக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                  (எம்.பரீட்)
தம்பலகாமத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.எம்.எம்.பளீல் கொல்லப்பட்டமைக்கு தம்பலகாமம் பிரதேச சபையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம். சுபியானால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகர் கே.எம்.பளீல் கடந்த 9ஆம் திகதி வீட்டு உரிமையாளர் ஒருவரால் அடித்து கொல்லப்பட்டமைக்கு சபை கண்டனம் தெரிவிக்கின்றது.

எதிர்காலதிதில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். பொது சுகாதார பரிசோதகர் கே.எம்.பளீலின் குடும்பத்தினருக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

அவரது குடும்பத்தினருக்கு சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X