2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு திருமலைக்கு விஜயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

தல யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர்  சரத்பாபு இன்று  சனிக்கிழமை காலை திருகோணமலைக்கு விஜயம் செய்து சைவாலயங்களை தரிசித்தார்.

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கும் அருகில் உள்ள ஆலடி விநாயகர் ஆலயத்திற்கும் நடிகர் சரத்பாபு தனது குழுவினருடன் சென்று வழிபட்டார்.

இதன்போது, ஆலடி விநாயகர் ஆலயத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் மகாகும்பாபிNஷக நிதிக்கும் அவர் நன்கொடை வழங்கினார்.

ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதினகர்த்தா வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக் குருக்களையும் அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்து உரையாடினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .