2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

உவர்மலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை, உவர்மலைப் பிரதேசத்தில் கடந்த 16 நாட்களாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிருகின்றது.

கடந்த இரு வாரங்களாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குழாய்நீர் மிகக் குறைந்த நேரத்திற்கே வழங்கப்படுவதுடன், மிகக் குறைந்த அழுத்தத்துடன் குழாய்களில் நீர் வருவதால் நீர்த்தாங்கிகளுக்கு ஏற்றி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த முடியாத நிலைமை  உள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தண்ணீர் பவுசர்கள் மூலம் ஓரளவிற்கு குடிநீரைப் பிரதேச மக்களுக்கு வழங்குகின்றன. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .