2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கடலில் நீராடிய இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி, எம்.பரீட்)

திருகோணமலை, கிண்ணியா மாபிள் பீச் கடலில் குளித்துக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த கமகே (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X