2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூ.வின் சி.தண்டாயுதபாணி தெரிவு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன், ரமன்)


கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிங்காரவேலு தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Sujitha Friday, 28 September 2012 04:47 PM

    கிழக்கு மாகாண தேர்தலின் படி அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்ற துரைரெத்தினம் அவர்களுக்கு வளங்கப்படும் என்று விபுல மக்கள் எதிர்பார்த்தார்கள்... இந்த ஏமாற்றம் எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மிக பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை...

    Reply : 0       0

    sri Friday, 28 September 2012 08:15 PM

    பதினொருபேரும் சேர்ந்து எடுத்த முடிவு... தகுதியும் வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X