2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மாகாண சபை தனித்து பயணிக்க முடியாது: கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான்

Super User   / 2012 நவம்பர் 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)


அரசியலமைப்பின் படி எந்தவொரு மாகாண சபையும் தமது விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றி கொள்வதற்காக  தனித்து பயணிக்க முடியாது என கிழக்கு  மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம தெரிவித்தார்.

மாகாண சபைககளுக்கு எப்போதும் மத்திய அரசின் அனுசரனையும்  ஒத்துழைப்பும் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன்போது கிழக்கு  மாகாண ஆளுநர் விசேட உரையாற்றினார். சுமார் 45 நிமிடங்கள் ஆற்றிய இந்த விசேட உரையில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

"ஆயுத குழுக்களின் உத்தரவு படி அன்று மாகாண சபை தேர்தலில் பங்குபற்ற முன்வராதிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் குழுக்களும் இன்று எந்தொரு அச்சசுறுத்தலுமின்றி தேர்தலில் போட்டியிட்டமை கிழக்கு மாகாண மக்கள் பெற்றுள்ள சிறந்த ஜனநாயக சுழலுக்கு முன்னுதரானமாகும்.

மாகாண சபைகள் ஈட்டிக்கொள்ளும் வருமானங்கள் போதுமானதல்ல. இதனால் மாகாண சபைகளுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. யுத்தம் முடிந்த போதும் சில நாடுகள் இன்னும் எமது நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. எனினும் இதற்கு கிழக்கு மாகாண மக்கள் பிரதிகள் உடந்தையாக செயற்படமாட்டார்கள்" என்றார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X