2025 மே 10, சனிக்கிழமை

அடையாள வேலை நிறுத்தத்தில் ஒன்றிணையவும்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

Kogilavani   / 2012 நவம்பர் 28 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஒன்றிணைந்த தொழில் சங்கங்கள் நடாத்தவுள்ள அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை ஒன்றிணையுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் , தேசிய பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.சலீம் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

அரசாங்கம் சம்பள அதிகரிப்பு என்ற பேரில் எதிர்வரும்  ஜனவரியில் அதிகரிக்க உள்ள முதலாம் கட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில், அரச ஊழியர்களின் கையில் மிஞ்சப் போவது வெறும் ஐந்து ரூபா மாத்திரமேயாகும்.

ஆசிரிய சேவை தாபிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட சம்பளத்தை தொடர்ந்து 2/97சுற்றறிக்கைமூலம்   முரண்பாடு ஏற்படுத்தப்பட்டது.

அம்முரண்பாடு 6/2006((IV))சுற்றறிக்கை மூலம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இம்முரண்பாடுகளுக்கு தீர்வாக வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 6/2006 (VIII) சுற்றறிக்கை மற்றும் தயாரிக்கப்பட்ட புதிய பிரமாணக்குறிப்பு, கையொப்பமிடப்படாத 2010/38 சுற்றறிக்கை, கையளிக்கப்பட்ட முன்;டிகல அறிக்கை என அனைத்தும் கிடப்பில் கிடக்கின்றன.

தற்போது கல்வித்துறையில் பழைமையான சுற்றறிக்கைகளைப் புதுப்பிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது கற்றவர்களை ஏமாற்றும் மற்றொரு வடிவமாகும்.

எனவே, அமுல்படுத்தப்படாதிருக்கும் சுற்றறிக்கைகளை உடன் அமுலுக்கு கொண்டுவரக்  கோரி நடாத்தப்படவுள்ள இவ் அடையாள நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களையும் அதிபர்களையும் ஒன்றிணையுமாறு கோருகின்றோம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X