2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களில் வரவேற்புத் தூண்கள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)
அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களில் உல்லாசபயணிகளை வரவேற்கும் விதத்தில் பொருத்தமான வசனங்களுடன் வரவேற்புத் தூண்களை நிறுவ கிழக்கு மாகாணசபை புதிய ஆண்டில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்யவும் உல்லாச பயணிகளைக் கவரவும் இவ்வாறான தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை சமர்ப்பித்த அமைச்சரவைப்பத்திரத்தை மாகாண சபையின்
அமைச்சரவை கடந்த டிசம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான உதுமாலெவ்வை தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .