2025 மே 10, சனிக்கிழமை

திருகோணமலை ஊடக இல்லத்தை தொடர்ந்து இயங்கவைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை ஊடக  இல்லத்தை தொடர்ந்து மீண்டும் இயங்கவைப்பதற்கு சேர்ச் போ கொமன் கிரவுண்ட் நிறுவனம் ஐரோப்பிய  வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து உதவுவதற்கு   முன்வந்துள்ளது.

இது தொடர்பான  பேச்சுவார்த்தை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம், கொமன் கிரவுண்ட் நிறுவனம்,  ஐரோப்பிய வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உவர்மலை தேன்தமிழ் வீதியிலுள்ள ஊடக இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது  எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தற்போதுள்ள ஊடக இல்லத்தை விகாரை வீதியிலுள்ள புதிய  கட்டிடத்திற்கு  இடமாற்றுவது,  ஊடவியலாளர்களுக்கு உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல்,  பயிற்சி வழங்குவதற்கு  நடவடிக்கை  எடுத்தல்,  உடகவியலாளர்கள் விரும்பிய நேரத்தில் இல்லத்திற்கு  சென்று சலுகைகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X