2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராக சுபியான் நியமனம்

Super User   / 2013 ஜனவரி 07 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத், கஜன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் இணைப்புச் செயலாளராக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் நியமிக்கப்பட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடமையாற்றிய இவர் மாவட்ட மட்டத்தில் சிறந்த சமுர்த்தி உத்தியோகத்தராகத் தெரிவு செய்யப்பட்டு தம்பலகமம் சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளராகவும் கடமையாற்றினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சர்பாகப் போட்டியிட்டு தம்பலகமம் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.  கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தம்பலகமாம் பிரதேச சபை தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தவிசாளராகவும் தெரிவு செய்யப்படடார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .