2025 மே 10, சனிக்கிழமை

இடமாற்ற சபையின் அனுமதியின்றி ஆசிரியர் இடமாற்றங்களில்லை: மாகாண கல்வி பணிப்பாளர்

Super User   / 2013 ஜனவரி 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கஜன்

இடமாற்ற சபையின் அனுமதியின்றி கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படமாட்டாது என கிழக்கு  மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற் சங்கங்களிற்கும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது பற்றி முன்னரே குறித்த வலயக் கல்வி பணிப்பாளர்  ஊடாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் குறித்த ஆசிரியர் தன்னை தயார்படுத்திக் கொள்வதோடு தனக்கு பொருத்தமான பாடசாலைகளுக்கு அவர் விண்ணபம் nசய்வும் வசதியாக  இருக்கும்' என தொழிற் சங்கங்கள் தெரிவித்தன.

இதனை மாகாண கல்வி பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பில் இலங்கை  தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை  இஸ்லாமிய ஆசிரியர் சங்கம  ஆகிவற்றின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • jesmin Saturday, 12 January 2013 03:46 AM

    இப்போது மாகாணக் கல்வி அமைச்சில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2013 ஜனவரி முதலாம் திகதி மீண்டும் நீங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமை ஏற்ற பின்னர் எத்தனை தற்காலிக, நிரந்தர இடமாற்றங்களை வழங்கியுள்ளீர்கள் என்று எண்ணிக்கையில் சொல்ல முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X