2025 மே 10, சனிக்கிழமை

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 12 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார்.

ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.

உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்த சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதனால் ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.

இதேவேளை ரிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை  முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Atham Saturday, 12 January 2013 02:36 PM

    இப்போது புரிகிறது குற்றம் ஏதும் செய்யாத இந்த அப்பாவி சிறுமியை ஏன் காப்பாற்ற முடியாமற் போனது என்று!

    பரிதாபத்துக்குரிய மனிதர்கள்!! :-(

    Reply : 0       0

    komaalikal Sunday, 13 January 2013 02:05 PM

    கொலை வெறியாடிவர்களுக்காக,"அல்லா"வை துணக்கழைத்து,சரிஆ சட்டமே சரி எனப் பேச வைத்த "இஸ்லாமிய ஆதிக்கவாதிகள்" பற்றி கவனம் செலுத்துவோம்.

    Reply : 0       0

    Mokammed Hiraz Sunday, 13 January 2013 04:13 AM

    உங்களால் ஏற்றுகொள்ளாமல் வேறு என்னதான் செய்ய முடியும்? போராட என்ன நீங்கள் அல் உதைபியின் பரம்பரையா என்ன??? மதுபான கடையில் ஷகாத் வசூலிப்பதுபோல் இருக்கிறது. சட்டவிரோதமான ஒரு படுகொலைக்கி நம்மவர்கள் ஷஃரியத் சாயம் பூசி மறைக்க பார்ப்பது ஷஃரியத் புனிதமானது. அது புனிதர்களால் புனித தேசங்களில் மட்டும் அமுல்படுத்தபடவேண்டியது. ஷரியதுக்கு மாற்றமான பணிபெண் வியாபாரத்தில் அதனை தொடர்புபடுத்துவது ஷரியத்தையே கேவலப்படுத்துவதற்கு ஒப்பானது...

    Reply : 0       0

    mahdhi Saturday, 12 January 2013 07:11 PM

    Uyir koduppawanum allah than
    Uyir eduppawanum Allah than

    Reply : 0       0

    mohan Saturday, 12 January 2013 06:43 PM

    இவர்களூக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும். இக் குடும்பத்தின் கண்ணீரை அனைவரின் கைகளூம் துடைக்க‌ வேண்டும்

    Reply : 0       0

    Selva Saturday, 12 January 2013 06:16 PM

    மந்திரியார் ஹக்கீம் பல தடவைகள் சவூதி சென்று வந்தவர், அக்காலத்தில் இப்பெண் சிறையில் இருந்தா. ஹக்கீம் இவவைவ்பற்றி மன்னருடன் கதைக்காமல் தமிழனின் படுகொலைகளை நியாயப்படுத்தி மன்னரை தமிழருக்கு எதிராக யுஎன்னோவில் வாக்குபோட பண்ணினதில் வெற்றிகண்டவர். இப் பெண்ணக்காக ஒரு சொல்லும் கதைக்கவில்லை? கொழும்பில் தமிழருக்கெதிராக போராடிவர்கள் முஸ்லிம் பெருமக்கள்.

    Reply : 0       0

    Ealaththu Erasenthir Saturday, 12 January 2013 05:05 PM

    சட்டங்கள் இயற்றுவது மனிதன். கடவுள் அல்ல. மனிதனுக்கு மேற்பட்ட சக்தியை நீங்கள் உங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப எவ்வாறும் அழைக்கலாம். கடவுள் புனிதமானவர். அப்புனித தன்மையில் கொடூரத்திற்கு இடமில்லை. கொடுரம் இருக்குமானால் அது புனிதம் அல்ல.

    Reply : 0       0

    mohammed Saturday, 12 January 2013 03:59 PM

    ரிசனா தவராக தண்டிக்கபட்டால் சம்மந்தபட்டவர்களை அல்லாஹ் மறுமையில் தண்டிப்பான். ரிசனாவின் தாய் கூறிய விடயம் சரிதான். மார்க்கம் பற்றி சரியாக தெரியாமல் குறை கூற கூடாது.

    Reply : 0       0

    ishak mohideen Saturday, 12 January 2013 03:18 PM

    இஸ்லாம் சமூகத்துக்கே பெருமையை தேடி தந்த தாய்.
    ''மாஷா அல்லாஹ்''

    Reply : 0       0

    Kumar Saturday, 12 January 2013 02:52 PM

    பின்னர் ஜனாதிபதியினை மன்னிப்பு கேட்டு கொண்டு மனுகொடுத்து விடுதலை செய்ய சொல்லி கேட்டது ஒரு வித பிரயோசனமும் இல்லை. சவுதி சட்ட திட்ட பிரகாரம் றிசான குற்றவாளி என்றால் அவர்களுக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு சரி என்று முதலிலே ஏற்று கொண்டிருக்கவேணும். சவுதி அராபிய முஸ்லீம் மக்களின் புனித பூமி. ஹஜ் கடமைகளை முடிக்க அங்கு இஸ்லாமியர்கள் செல்கின்றனர்.
    அங்கேயே அவர்கள் இறந்தால் புண்ணியம் செய்தவர்கள் என்பது வழமை

    Reply : 0       0

    AJ Saturday, 12 January 2013 09:15 AM

    எப்படி எல்லாம் பேச வைக்கிறாங்க :)

    Reply : 0       0

    urumal Saturday, 12 January 2013 01:25 PM

    குற்றங்களை தடுப்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய மண்ணில் அன்று புரையோடிப்போயிருந்த குற்றங்களை இல்லாது ஒழிக்கவே மிகக் கடுமையான ஷரியா சட்டசரத்துக்கள் கொண்டுவரப்பட்டன. இன்றுவரை அது மதத்தின் பெயரால் மதத்தால் உலக முஸ்லீம்களால் புனிதமாக நோக்கப்படுகின்றது. எந்த முஸ்லீமும் அதை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டான். அந்த வகையில்,பல நாட்டு முஸ்லீம் இன மக்களின் நடைமுறைகளையும் செயற்பாடுகளையும் நேரில் பார்த்தவன் என்ற வகையில் ஷரியா சட்டம் அவர்களுக்கு சரியானதும் தேவையானதும் ஆகும்.
    இதே போன்று மிகக்கடுமையான தண்டனைகள் மூலமே பல மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கவும் முடியும் என்பததே யதார்த்தம்.

    Reply : 0       0

    anbanavan Saturday, 12 January 2013 01:23 PM

    அன்புள்ள தாயே உங்களூக்கு பெரிய மனது.அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுங்கள். அல்லாஹ் ஒருவனே அனைத்து முஸ்லிம்களூக்கு போதுமானவன். ஹஸ்புனல்லாஹி வனிஃமல் வகீல்@

    Reply : 0       0

    mohan Saturday, 12 January 2013 01:17 PM

    தயவு செய்து கொலைக்கு இப்படீ மார்க்க விளக்கம் செய்யாதீர்
    என் சகோதரியின் கொலைக்கு காரணமானவர்கள் கடவுளால்
    தண்டிக்கப் படுவார்கள் என் கண்களாள் கண்ட மிக பெரிய‌
    கொடுமை இக்கொலை

    Reply : 0       0

    Abdul Jaleel Saturday, 12 January 2013 11:34 AM

    பாலனவன் உயிர்காக்க பிஞ்சவனின் மார்தடவி,
    உயிர்காக்க எத்தனித்து சிறைவாசம் சென்றவளே!
    ஏழாண்டு மேலாக எவ்வாறு இருந்தாயோ,
    சிறையிருந்தும் பலனென்ன சிரச்சேதம் நடந்ததுவே!
    பிஞ்சுனது ஏழாண்டு எவ்வாறு கழிந்ததுவோ!
    யார்சொல்ல நான்கேட்பேன் ............
    கல்லும் கரைந்துருகும் இவள் மனம் கரையலியே !
    காட்டறபி இவள்தானோ நானறியேன் பராபரமே!

    Reply : 0       0

    fowmy Saturday, 12 January 2013 11:30 AM

    இதுதான் உண்மையான இஸ்லாமிய உணர்வு அல்ஹம்து லில்லா...

    Reply : 0       0

    Abdul Jaleel Saturday, 12 January 2013 10:26 AM

    அறிவிப்பாளர்:அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
    அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர்
    அடியானின் குழந்தை ஒன்று இறக்கும்போது, அல்லாஹ் தன் வானவர்களை நோக்கி, ""நீங்கள் என் அடியானுடைய குழந்தையின் உயிரைக் கைப்பற்றிக் கொண்டீர்களா?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆமாம்'' என்று கூறுகின்றனர். மீண்டும் அவர்களிடம் ""நீங்கள் அவனுடைய நெஞ்சத் துண்டின் உயிரையா கைப்பற்றிக் கொண்டீர்கள்?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆம்'' என்று கூறுகின்றனர். பிறகு அவர்களிடம் ""என் அடியான் என்ன கூறினான்?'' என்று இறைவன் வினவுகின்றான். அவர்கள், ""இந்த சோதனைக்காக அவன் உன்னைப் புகழ்ந்து "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே
    உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) என்று கூறினான்'' என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ், ""என்னுடைய இந்த அடியானுக்காக சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள்; அதற்கு பைத்துல்ஹம்த் (நன்றி இல்லம்) என்று பெயர் சூட்டுங்கள்'' என்று கூறுவான்.

    Reply : 0       0

    anwarabdulla Saturday, 12 January 2013 10:14 AM

    அல்ஹம்துலில்லஹ் அல்லஹ்வின் சட்த்தில் யாருக்கும் குறைகாண முடியாது. மனிதன் தவறு செய்து இருந்தால் அல்லாஹ் மறுமையில் பர்ர்துக்கொள்வான் இன்சா அல்லஹ்

    Reply : 0       0

    abdullahfaaris Saturday, 12 January 2013 10:12 AM

    masha allah unmayana eeman niraintha oru thaain thahavalithu allahvin kaddalikkullana intha sariya saddaththai mathikkum intha annaikku allah arul purivanaha Aameen intha kudumpaththitku aaruthalaha intha duavai sollikkolvom * AHLAMALLAHU AJRAKA WA AHSANA ASAKA WA GAFARALI MAITHIKA" ALHAMTHULILLAH@.@.@

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X