2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


மூதூர் பீஸ் - ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ் - ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக்கோரி பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்காகவே பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்கள் கையெழுத்திடும் முயற்சியில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக மஜ்லிஸ் அஸ்-ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்தார்.


  Comments - 0

  • aj Saturday, 19 January 2013 01:57 PM

    நல்ல விடையம். வெறும் முஸ்லிம் பெண்கள் மட்டும் போகாதீர்கள் வேறு இனத்தவர் போனால் பிரச்சினை இல்லை என்று சிலர் பேசுவது கண்டிக்கதக்கது. அப்படி ஒரு குறுகிய நோக்கம் இல்லாமல் இலங்கை முழுவதும் பெண்கள் வெளிநாடு செல்லாமல் தடுப்பதுக்கான வேலைகளை செய்யவேண்டும்.

    Reply : 0       0

    Haniff Sunday, 20 January 2013 08:48 AM

    நல்ல விடயம், தொடரட்டும் உங்கள் முயற்சி

    Reply : 0       0

    babu Monday, 21 January 2013 02:36 PM

    நல்ல விடயம், தொடரட்டும் உங்கள் முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .