2025 மே 10, சனிக்கிழமை

தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தவே: சம்பந்தன்

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும்வேளை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கின்றோம். தமிழரசுக் கட்சியின் கிளைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயலாக எவரும் கருதிவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் கைவிடமாட்டோம். சாதகமான அரசியல் சூழ்நிலை உருவாகும் தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X