2025 மே 10, சனிக்கிழமை

அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணை

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் இந்த தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த தனிநபர் பிரேரணை சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

"2011ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின்போது கிழக்கு மாகாணத்திற்கு 293 உள்ளீர்க்கப்படுவார்கள் எனவும் இவர்கள் 2010.12.31ஆம் திகதி மூன்று வருடங்களை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எனவே கடந்த யுத்த காலத்திற்கு மத்தியில் கல்விக்கு பங்காற்றியவர்கள் என்ற ரீதியில் 31.12.2010ஆம் ஆண்டு மூன்று வருடங்கள் பூர்த்தி செய்தவர்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என மாகாண சபையின் தீர்மானத்துக்காக எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்கப்படவுள்ளேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X