2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எல்லை மீள்நிர்ணயத்தில் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும்: சம்பந்தன்

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள்நிர்ணய விடயத்தில் முஸ்லிம் மக்கள் உட்பட ஏனைய  இனங்களின் நலன்களையும் பாதுகாக்கக் கூடிய முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன் இந்த எல்லை மீள்நிர்ணயம் விடயத்தில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்கும் விதமாகவும் நாம் நடந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்த்pல் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றுகையில் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தமிழர் பிரச்சினைக்கு கௌரவமான ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று விருப்பம் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமானவர்கள் இடையே காணப்படுகின்றது. முஸ்லிம் மக்களும் அவ்வாறே விரும்புகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை தருகின்றோம் என்று பகிரங்கமாக  கூறினோம்.

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஏற்க முன்வரவில்லை. துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் அரசியல் தலைமை அதற்கு ஆதரவாக காணப்படவில்லை. முஸ்லிம் தலைமை வேறு பல காரணங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதையே விரும்புகின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. இனப் பரம்பலை மாற்றாத விதத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்" என்றார்.


  Comments - 0

  • ash Sunday, 20 January 2013 08:07 AM

    முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளின் போது பல தடவைகள் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இட நெருக்கடி சம்பந்தமாக உங்களிடம் பேசினார். ..........

    Reply : 0       0

    m.sountharajan. Sunday, 20 January 2013 10:33 AM

    ஐயா முஸ்லிம்களை பாதுகாக்கவும் அவர்களின் பிரதேசங்களை முன்னேற்றவும் முஸ்லிம் தலைவர்கள் இருகின்றார்கள் நீங்கள்அவர்களை பற்றி கவலைப்படத்தேவையில்லை ஏற்கனவே அவர்கள் அதனை செய்து காட்டி இருக்கின்றார்கள், பிரதேச சபையாக இருந்த கல்முனை, அக்கரைபற்று, ஆகியவற்றை மாநகரசபையாகவும் கத்தான்குடி ஏறாவூர் கிண்ணியா ஆகியவற்றை நகர சபை யாக புதிதாக உருவாக்கி இருக்கின்றார்கள், அக்கரைபற்று, ஏறாவூர், கிண்ணியா ஆகிய பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கி இருக்கின்றார்கள், புதிய கிராமசேவையாளர் பிரிவு பிரிக்கும் போது மூதூரில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை 20 கிராமசேவையாளர்வாக உயர்த்தி இருக்கின்றார்கள் ஆகவே அவர்களைப்பற்றி கவலைபடாமல் தமிழகளின் பிரதேசமும் பிரதிநிதிகளும் பாதுகாக்கும் வகையில் செயல்படவும்.

    Reply : 0       0

    Sumathy M Sunday, 20 January 2013 03:14 PM

    முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது மௌனம் சாதித்த சம்மந்தன்... தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதை முஸ்லிம்கள் யாரும் நம்பப்போவதில்லை. காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் அரசியல் தலைமையின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .