2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நடு வீதியில் பாரிய குழி ஏற்பட்டதால் பரபரப்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலை,  வில்விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு முன்னால் பிரதான வீதியில் திடீரென பாரிய குழியொன்று ஏற்பட்டமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளில் ஏற்பட்டுள்ளது.

குழி ஏற்பட்டது மட்டுமன்றி குழிக்குள்ளிருந்து  அதிகமான  நீர் பீறிட்டு வெளியேறியது.

அவ்விடத்திற்கு விரைந்த நீர்வழங்கல் வடிகான்; அமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் கோ.வாசுதேசம் உடனடிhக  செயற்பட்டு நீர் விநியோகத்தை முற்றாக  நிறுத்தினார். நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பே  பாரிய குழி தோன்றுவதற்கான  காரணம் பின்னர் மக்கள் தெரிந்துக்கொண்டனர்.

நகரசபைத் தலைவர் .க.செல்வராசா உறுப்பினர் த.கௌரிமுகுந்தனுடன் சம்பவ இடத்திற்கு வந்து நிலமையைப் பார்வையிட்டார். திருத்த வேலைகளை உடனடியாக  ஆரம்பிப்பதற்கு நீர்வழங்கல் வடிகான் அமைப்பு சபையினரைக் கேட்டுக் கொண்டு நகர சபை தலைவர் கனரக  வாகனத்தையும் வழங்கி இருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .