2025 மே 10, சனிக்கிழமை

வறுமையைப்போக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரிசானாவின் தாய்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களை கொலை செய்தல், ஆணி ஏற்றுதல், அடித்தல் உள்ளிட்ட சித்திரவதைகளை தடுக்க வேண்டுமாயின் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களுக்கு இலங்கையிலேயே வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதே சிறந்த வழி என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தாயாரான பரீனா நபீக் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கும் வறுமையைப் போக்க நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே முடியும் என்றும் ரிசானாவின் தாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

'வறுமைக் கோட்டில் வாழும் இலங்கையர்களுக்கு உள்ள ஒரேயொரு வழி வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமேயாகும். இந்த நிலைமை எதிர்க்காலத்தில் இடம்பெறக் கூடாது. அதற்காக, வறுமையில் வாழும் குடும்பங்களின் பொருளாதார நிலைமை மேம்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என்று ரிசானாவின் தாயார் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • monik hossain Monday, 04 February 2013 06:00 PM

    இலங்கை இல் இருந்து கொண்டு சிங்கப்பூரில் வாள்வதாக நினைகக்கவேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X