2025 மே 10, சனிக்கிழமை

தீர்மானங்களை கிழக்கு மாகாண ஆளுநர் உதாசீனம் செய்கிறார்: மாகாண அமைச்சர்

Super User   / 2013 ஜனவரி 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹனீக் அஹமட்

கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சரவையிலும் மேற்கொள்ளப்படும் பிரேரணைகள் வெறுமனே பேச்சுக்களுடன் மட்டும் நிறைவடைந்து விடுகின்றன. நாம் எடுக்கின்ற தீர்மானங்களை கிழக்கு மாகாண ஆளுநர் கணக்கில் எடுக்காமல் உதாசீனம் செய்து தூக்கி வீசி விடுகின்றார் என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எனவே, சபையில் எடுக்கப்படும் பிரேரணைகளுக்கான தீர்வினை மேற்கொள்வதற்குரிய உரிய நடவடிக்கைகளை சபையின் தலைவி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ஆரிவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்ளூ

"அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முடியாத அமைச்சர்களாவே நாங்கள் இருக்கின்றோம் என்பதை மிகவும் கவலையோடு நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். மாகாண சபையிலும், அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை கிழக்கு மாகாண ஆளுநர் கணக்கில் எடுக்காமல் உதாசீனம் செய்து தூக்கி வீசுகின்றார்.

எங்கள் அமைச்சுக்களின் சார்பில் இந்த வருடத்துக்கான நாட்குறிப்பு புத்தகங்களை (டயரி) வெளியிடுவதில் கூட ஆளுநரின் தலையீடு காணப்படுகின்றது. இந்த வருடத்துக்கான நாட்குறிப்பு புத்தங்களை எமது அமைச்சினூடாக வெளியிடுவதற்கு நாம் முயற்சித்தபோது, வேண்டாம் என்று ஆளுநர் தடுத்துவிட்டார்.

இதுதான் கிழக்கு மாகாணசபையின் இன்றைய நிலையாகும். முhகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். இவை தொடர்பில் சபையின் தலைவி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார். 

You May Also Like

  Comments - 0

  • jesmin Friday, 25 January 2013 01:25 PM

    அப்படிஎன்றால் நீங்கள் ஏன் குந்திக்கொண்டிருக்க வேண்டும். உங்களின் தலைவரை விட நீங்கள் தைரியமாக பேசுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
    உங்களின் தலைவரோ பாம்பையும் நோகாமல், கம்பையும் நோகாமல் மக்களை வீராப்பு வசனங்களால் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். உங்களது தைரியம் அவருக்கு இல்லையே. மாகாண சபை தேர்தலின்போது ஆளுநரை சர்வாதிகாரி என்றாரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X