2025 மே 10, சனிக்கிழமை

ரிசானா வாழ்ந்த குடிசையை உடைக்க வேண்டாம்: தாயார்

Kanagaraj   / 2013 ஜனவரி 25 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.

வீட்டு நிர்மானங்களுக்கு பொறுப்பாக இராணுவத்தின் 224 ஆவது படையணி தலைமை அலுவலகத்தின் கர்னல் விக்கும் லியனகே செயற்படுவார்.

ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா மற்றும் தந்தை மொஹமது சுல்தான் நபீக் ஆகியோரே அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

சவூதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட தனது மகளான ரிசானா நபீக் வாழ்ந்த குடிசையை உடைக்காமல் இந்த வீட்டை கட்டுமாறு ரிசானாவின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Friday, 25 January 2013 12:59 PM

    ரிசானாவின் கதை இலங்கை வரலாற்றி கண்ணீர் காவியமான அலியாத்துயரம். சௌதி தனவந்தர்களின் பனம்பெற்று ரிசானாவின் குடும்பதுக்கு வேடுகட்டுவதை விட எமது ராணுவத்தின் வீடே பெரும்கைக்குரியதாகும்

    Reply : 0       0

    monik hossain Monday, 04 February 2013 05:38 PM

    இது கொன்சம் ஒவரா தெரியல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X