2025 மே 10, சனிக்கிழமை

ஜம்மியதுல் உலமா புல்மோட்டை கிளை பொதுச் செயலர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 ஜனவரி 26 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை புல்மோட்டை கிளை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர்,குச்சவெளி மத்தியஸ்த சபையின் உப தலைவர், குச்சவெளி காழி நீதி மன்றத்தின் பிரதான (ஜூடி) அங்கத்தவர் மற்றும் புல்மோட்டை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமான அஷ்ஷெய்ஹ் எஸ்.எச்.ஸாலிஹீன் (நளீமி) மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவரது வீடு செல்லும் பாதையில்வைத்து இனம்தெரியாத நபர்கள் இவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சத்திர கிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X