2025 மே 10, சனிக்கிழமை

வள்ளம் குடைசாய்ந்ததில் இரு சிறுவர்கள் பலி

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

திருகோணமலை, புடவைக்கட்டு பகுதி ஆற்றில் வள்ளம் குடைசாய்ந்ததில் ஒரே குடும்பததைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்த றாசீக் பரீத் றிஸ்வானா (வயது 13), றுசான் முஹம்மது றுக்தி (வயது 6) ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் புடவைக்கட்டு ஆற்றின் கலப்பு பகுதிக்கு மட்டி எடுப்பதற்றகாக சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இரு சிறுவர்களின் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X