2025 மே 10, சனிக்கிழமை

இடம்பெயர் மக்கள் மீள்குடியமரும்வரை உள்ளூராட்சிமன்ற எல்லைகளின் மீள்நிர்ணயம் நிறுத்தப்பட வேண்டும்: க.த

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் இவ்விரு மாகாணங்களுக்கும் திரும்பிவந்து தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமரும்வரை உள்ளூராட்சிமன்றங்களில் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவருமான க.துரைரெட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இன்னும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியமரவில்லை. அதுபோன்று வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை. மேலும்,  திருகோணமலை மாவட்டத்தின்  மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். இந்த நிலையில், உள்ளூராட்சிமன்றங்களின் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யமுடியாது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் உள்ளூராட்சிமன்ற எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விடயம் தொடர்பில் அக்கறையற்ற நிலையில் இருக்கின்றார்கள். எனவே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்திவிட்டு உள்ளூராட்சிமன்ற எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X