2025 மே 10, சனிக்கிழமை

விவசாயத் திணைக்களத்தின் முதலாவது கூட்டத்தொடர்

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

திருகோணமலை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் நடப்பு ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தொடர் அன்புவழிபுரம் திருகோணமலை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.குகதாசன் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் உப்பாலி ராஜபக்ஷ, திருகோணமலை மாவட்டத்தினை
பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாய அபிவிருத்தியுடன் தொடர்பான கம்பனிகளின்; பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தொடரின்போது, 2013ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய விரிவாக்கத்தினை மாவட்ட மட்டத்தில் விஸ்த்தரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மாவட்ட மட்டத்தில் விவசாயிகளுக்கு 2013 ஆம் ஆண்டிற்கான விதைநெல் மற்றும் பசளை விநியோகம், இசுய விதை உற்;பத்தி, பயிற்சிகள், பயிர் சிகிச்சை முகாம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் 2012 மார்கழி மற்றும் 2013 தை மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களின் மீளக்கட்டுமானம்; தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X