2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணியா நகரசபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா, பழைய வைத்தியசாலையில்; டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டிய சிரமதான நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் நகரசபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இச் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உரையாற்றிய கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி,

'இச்சிரமதானத்தைப் போன்று சகல அலுவலகங்கள் நிறுவனங்கள் பாடசாலைகளும் சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்து செயற்படுத்திவருமானால் டெங்கு நுளம்புப் பெருக்கத்தையும் பெருகக்கூடிய சூழலையும் அதனால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் கட்டுப்படுத்தமுடியும்'   என தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .