2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு தென்கொரியா பயணம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று நேற்று புதன்கிழமை காலை இரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவிற்கு பயணமாகியுள்ளது.

முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், அவரின் செயலாளர் கே.பத்மநாதன் மற்றும் உள்ளுராட்சி திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தென்கொரிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், இவ்விஜயத்தை மேற்கொள்ளும் முதலமைச்சர்கள் குழு, கொரிய சர்வதேச ஒத்துழைப்பு (கொய்க்கா) நிறுவனம் மற்றும் ஆசிய பவுண்டேஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொரிய நாட்டு வர்த்தக சம்மேளனம் உட்பட நிபுணத்துவமிக்க உயரதிகாரிகளுடன் கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திட்டங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைய சோல் நகரில் அந்த நாட்டின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் குழு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றது. அத்துடன், தென்கொரியாவின் தொழிற்துறை அமைச்சரையும் முதலமைச்சர் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .