2025 மே 10, சனிக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பொலிஸ் நடமாடும்சேவை

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு தம்பலகாம் பொலிஸ் பிரிவில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று நேற்று புதன்கிழமை முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார பி.அபேரட்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி  நீல் ஹெட்டியாரச்சி, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ரோகான் தசாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இறுதி நிகழ்வாக பரிசளிப்பு மற்றும் இசை நிகழ்வும் இடம்பெற்றுள்ளதுடன் திஸ்ஸபுரபௌத்த நிலையமொன்றும் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரியால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X