2025 மே 10, சனிக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Super User   / 2013 மார்ச் 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.சரவணன்

மூதூர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இரு இளைஞர்களை நேற்று திங்கட்கிழமை மூதூர் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் மீட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் நெய்தல் நகர் பிரதேசத்தில் உள்ள வீதியில் குழுவாக நின்றுகொண்டிருந்த இளைஞர்களை சோதனையிடப்பட்டனர்.

இதன்போது கற்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 40 மில்லி கிராம் கொண்ட இரு பக்கட்டுக்களில் 80  மில்லிக்கிராம் ஹெரோயின் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ளதுடன் ஹெரோயினும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும்  22 வயதுடையவர்கள்.  இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

You May Also Like

  Comments - 0

  • Sivanathan Thursday, 14 March 2013 01:08 AM

    இதற்கு ஹலால் சான்றிதழ் பெறப்பட்டு இருந்ததா..???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X