2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சம்மவச்த் தீவில் இலவச வைத்திய முகாம்

Super User   / 2013 மார்ச் 18 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியாவில் பின்தங்கிய பிரதேசமான சம்மவச்சத் தீவு பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் கிண்ணியா நகரபிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மவச்சத்  தீவு அஸ்ஸபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த வைத்திய முகாம் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சைகா நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றது.

கிண்ணியா நகர பிதா ஹில்மி மஹ்ரூபின் ஏற்பாட்டில் அனர்த்த நிலைமையின் போது கலந்துரையாடப்பட்டதன் நிமிர்த்தம் குறித்த இலவச மருத்துவ முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெள்ள மற்றும் அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் மக்களுக்காக இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த இலவச மருத்துவ முகாமுக்கு அமானா தகாபுல் இன்சுரன்ஸ், ஹட்டன் நெசனல் வங்கி, சம்பத் வங்கி ஆகியன அனுசரனையினை வழங்கியிருந்தார்கள்.



  Comments - 0

  • sam Tuesday, 19 March 2013 02:47 AM

    நல்லது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .