2025 மே 10, சனிக்கிழமை

ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிகளை வழங்குமாறு கிழக்கு முதலமைச்சர் உத்தரவு

Super User   / 2013 மார்ச் 19 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


குச்சவெளி பிரதேசத்தில் காணிக் கச்சேரி மூலம் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ள மக்களுக்கு சொந்த  காணிகளை உடனடியாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாகாண காணி ஆணையாளருக்கு மேற்கொண்டார்.

யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு புல்மோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மண்கிண்டிமலை, தேத்தாவாடித்தீவு, வீரந்தீவு மற்றும் பொன்மலைக்குடா ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அக்கிராமங்களுக்கு மீள்குடியேற முற்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த மக்களுக்கு சொந்தமான காணி தமக்கு சொந்தமானது என கடற் படையினர் தெரிவித்தனர்.இதனையடுத்து அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடற் படையினருக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். ரம்ழான் இன்றைய மாதாந்த அமர்வில் தனிநபர் பிரேரனையொன்றை கொண்டுவந்தார். இந்த பிரரேணை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் விவாதம் இடம்பெறவில்லை. அத்துடன் இந்த பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் கவனத்திற்கு கு மாகாண சபை உறுப்பினர் ஆர். ரம்ழான் கொண்டுவந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் செயலகத்தில் இன்று மாலை விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது காணிக் கச்சேரி மூலம் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ள சகல மக்களுக்கும் சொந்தமான காணிகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், கடற் படையினரால் அபகரிக்கப்பட்ட சகல காணி நிலங்களிலிருந்தும் அவர்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், ஆர். அன்வர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆதம்பாவா தௌபீக்,  கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கே.கே.ஜீ
விஜயதிலக,  குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் மற்றும் திருகோணமலை மாவட்ட வன விலங்கு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X