2025 மே 10, சனிக்கிழமை

கட்சி பேதங்களை மறந்து தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் நிற்க வேண்டும்: சம்பந்தன்

Super User   / 2013 மார்ச் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.குருநாதன்

தமிழ் பேசும் மக்கள் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் நிற்க வேண்டிய காலம் இதுவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, திரியாய் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்னைக்கு தீர்வு ஒன்றைக் காணும்படி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருவதே இதற்கான காரணமாகும்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதன் காரணமாகவேதான் இன்று இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை எதிநோக்க வேண்டியிருக்கின்றது.

அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் விதத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயலாற்றுவதன் மூலமே தான் இது சாத்தியமாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • ash Thursday, 28 March 2013 11:04 AM

    முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இடப்பிரச்சினையை நீங்கள் தீர்த்துவைக்க் தயாரில்லை, பிரச்சினையென்று வருகின்றபோது முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். இது என்ன? முன்னாள் அமைச்சர் அண்மையில் சொல்லியிருந்தார் "அலைக்காத விருந்தாழிகள் வருவார்கள்" என்று...

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 28 March 2013 11:55 AM

    நிச்சயமாக இரு சராரும் ஒன்றுபட்டால் மட்டுமே சிறுபான்மை சமூகம் தன்களது உரிமையை பெறமுடியும். கசப்பான கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு ஒன்றுபட இரு சாராரும் தயாராக வேண்டும்.

    Reply : 0       0

    Nila Thursday, 28 March 2013 02:12 PM

    ஐயா நீங்கள் எப்ப தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போறிங்கள்?
    விசர் அரசியல் செய்யாதிங்கோ...

    Reply : 0       0

    Nila Thursday, 28 March 2013 02:14 PM

    ஐயா நீங்கள் எப்ப தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போறிங்கள்? விசர் அரசியல் செய்யாதிங்கோ...

    Reply : 0       0

    Nallur Kanthan Thursday, 28 March 2013 04:29 PM

    ஐயா நீங்கள் எப்ப தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போறிங்கள்?
    விசர் அரசியல் செய்யாதிங்கோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X