2025 மே 10, சனிக்கிழமை

நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு காணுவதே இலக்கு: இரா. சம்பந்தன்

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

'சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை காணுவதே எமது இலக்கு ஆகும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'இனி ஒரு யுத்தம் வேண்டாம். அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை இனியும் நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை' என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

மூதூர் பிரதேசத்தில் கங்குவேலி என்ற கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை வந்த ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன், வன்னி சென்று நிலவரத்தை பார்வையிட்டார். பின்னர் கொழும்பு திரும்பி ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். அக்கூட்டறிக்கையில் தாம் அளித்த உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன' என்றார். 

'யுத்தம் முடிவுற்ற பின்னர் யுத்தம் ஏன் நடந்தது என்பதைக் கண்டறிந்த சர்வதேச சமூகம் இனப் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்பதை கண்டறிந்து அதனை நிறைவேற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது' என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • Mayuran Friday, 29 March 2013 05:18 PM

    சர்வதேச சமூகம் செய்வது குறித்து எல்லோருக்கும் தெரியும், ரி.என்.எ என்ன செய்ய போகின்றது? உங்களின் பங்கு என்ன? அடுத்த தேர்தல் வரை காத்திருப்பதா?

    Reply : 0       0

    radish.S Friday, 29 March 2013 06:43 PM

    நிலைத்து நிற்கும் தீர்வு என்று திரு.சம்பந்தன் கருதுவது எதை?
    சர்வதேச சமுகம் 13ஆவது திருத்த சட்டத்தையே முன்வைக்கிறது. இதை அவரே எதிர்த்திருக்கிறார்.

    Reply : 0       0

    Sumathy M Friday, 29 March 2013 10:07 PM

    ஐயா சம்பந்தன் அவர்களே! இனியொரு யுத்தம் வேண்டாம் என்று நீங்கள் கூறுவது ஒரு சிலரை திருப்திப்படுத்த. ஆகஸ்ட் மாதம் 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்த அருமையான தீர்வுத் திட்டத்தை இனவாத UNPயுடனும் JVPயுடனும் சேர்ந்து குழப்பியடித்து வரலாற்று துரோகம் செய்தவர்கள் நீங்கள்.
    2000ஆம் ஆண்டு, தீர்வை நீங்கள் ஆதரித்திருந்தால் எத்தனை ஆயிரம் எமது மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X