2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்: எம்.எஸ்.சுபைர்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

'முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவினை மிக விரைவில் எடுக்காவிட்டால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியநிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும்' என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.

ஏறாவூர் அல் முனீரா பாலிகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியானதும் நன்கு திட்டமிட்டதுமான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

'இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாகிய எம்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளது. நாம் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது. மக்கள் எங்களை நோக்கி கைகளை நீட்டக்கூடிய நிலை ஏற்படப்போகின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'கிழக்கு மாகாண சபையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 22 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றோம். கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் ஒரே நோக்கில் சிந்தித்தால் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும்' என்றார்.

'இதேவேளை கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு நல்ல தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X