2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அரச சேவைக்கான கிழக்கு மாகாண விதிக்கோவை தயார்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண அரச சேவைக்கான விதிக்கோவை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஆளுநர் ரியல் அட்மிரால் மொஹான் விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், 'இக்கையேடானது கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிர்வாகத்தை செம்மையாக நடைமுறைப்படுத்த செயல்படுத்த உதவும் என நம்புகிறேன்' எனக் கூறினார் ஆளுநர்.

கிழக்கு மாகாணசபையின் வரலாற்றில் முதன் முதல் நிர்வாக நடைமுறைகள் நீதி நடைமுறைகள் சம்பந்தமாக விசேட அறிவித்தல் நூலொன்றை வெளியிட்டிருக்கின்றோம் இது பாராட்டப்படக் கூடிய விடயம் எனவும் தெரிவிர்தனர். மேலும் இலங்கையில் இது மூன்றாவது வெளியீடு எனக் குறிப்பிட்டவர் ஏற்கனவே சப்பிரகமுவ, மேல்மாகாணங்களில் இவ்வகையான கையேடு வெளியிடிட்ருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

'இதற்கு முன் இந்த நீதி நிர்வாக நடைமுறைகள் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தெரியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை மாகாணத்தில் அனுபவித்து இருக்கிறோம். ஆசிரிய நியமனம் ஏனைய நியமனங்கள், பதவியுயர்வுகள், விசாரனைகள் சம்மந்தமாக பல்வேறு பிரச்சினைகள் அனுபவிக்க வேண்டியிருந்தது' என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

'நடைமுறைகளிலும் இது சிறந்தாக செயற்படுகின்றது. 7 வருடங்களுக்கு மேல் கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக கடைமையாற்றிய நான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளேன். 13ஆவது திருத்தச் சட்டம் பல முறைப்பாடு கொண்டதெனக் கூறப்பட்டபோதும் அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது என்பதே உண்மை. சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளை நியமிக்கும் போது, பதவி உயர்வு வழங்கும் போது பல சட்டப் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியுள்ளது. இவை இனிமேல் இக்கையேட்டு வழக்கத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

மாகாணத்துக்கு தேவையான ஆசிரியர் நியமனம், அதிபர் நியமனம் ஏனைய உத்தியோகத்தர் நியமனங்களை இந்ந மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் மூவினத்தையம் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தன மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X