2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி

Super User   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீத பொன்கலன், எஸ்.எச்.அமீர், எம்.பரீத், கியாஷ் சாபி

அரச காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமர் 0.4805 ஹெக்டெயர் காணியை அமன்தா பீச் ரிசோட் எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் குச்சவெளி பிரதேசத்திலுள்ள அரச காணியொன்றே அமன்தா பீச் ரிசோட் தனியார் நிறுவனத்திற்கு வழப்படவுள்ளது. இந்த காணி 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் கடந்த புதன்கிழமை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த காணி வழங்கல் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர  திஸாநாயக்கவினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் காணியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பினை கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .