2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருகோணமலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் தமிழ் மொழி பிரிவின் பொறுப்பதிகாரியாக தமீம் நியமனம்

Super User   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

திருகோணமலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் தமிழ் மொழி பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக முகைதீன் தமீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமையவே இவர் திருகோணமலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று திங்கட்கிழமை பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 24 வருடங்களாக பொலிஸ் சேவையில் அனுபவமுள்ள இவர்   மூதூர், குச்சவெளி உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .