2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நிறைகுறைந்த குழந்தைகளுக்கு போசாக்கு பிஸ்கட் வழங்கும் திட்டம்

Menaka Mookandi   / 2013 மே 04 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எச்.எச்.அமீர்


மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பாட்டாளிபுர கிராமத்தைச் சேர்ந்த நிறைகுறைந்த குழந்தைகளுக்கு போசாக்கு பிஸ்கட் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் தலைவர் பிஆர்.ஜெயகுமார் தலைமையில் பாட்டாளிபுர மத்திய மருந்தக கட்டிடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி
டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி, திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் முக்கியஸ்தர்களான ராஜராம் மோகன், ரவிச்சந்திரன், ஐபோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனடா றோட்டரி கழகத்தின் நிதி உதவியுடன் கொழும்பு ரீஜன்ஸி றோட்டரிக்கழகமும் திருகோணமலை றோட்டரிக் கழகமும் இணைந்து  மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் போசாக்கு பிஸ்கட் வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X