2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்

Super User   / 2013 மே 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.

நகர பிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள் பைசல் நகர் சின்னத் தோட்டத்தில் கொட்டப்பட்டு நிலையில் அவற்றை இனிவரும் காலங்களில் பயனுள்ள முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இல்லையெனில் அக்கழிவுகளால் இயற்கைச் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றினை தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தப்பட்டது. நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் பிரிகையடையக் (உக்கக்) கூடிய கழிவுகள், பிரிகையடையாத கழிவுகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு அவற்றில் பிரிகையடையக் (உக்கக்) கூடிய கழிவுகளை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் தரம் பிரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்கு உட்படுத்தி பசளைகளாக மாற்றுவதாகவும் பிரிகையடையாத கழிவுகளை சூழல்  பாதுகாப்பு காரணங்களுக்காக புதைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையிலேயே கழிவுகளை சேகரிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் இதற்கான ஒத்துழைப்பு உதவிகளை கரையோர பாதுகாப்பு திணைக்களம் வழங்கவுள்ளது. இந்நிகழ்வில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X