2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குறிஞ்சாக்கேணி ஆற்றில் முதலைகளின் நடமாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள குறிஞ்சாக்கேணி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கண்டு வழங்கிய  தகவலையடுத்து முதலைகளை பார்வையிடுவதற்காக மக்கள் கூடியுள்ளனர்.

இந்த ஆற்றில் ஏராளமானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், நீராடுவதற்கும் செல்கின்றனர். இதனால் ஆற்றுக்குச் செல்ல வேண்டாமெனவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X