2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்திற்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தின் 11ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை நியூசில்வெர் ஸ்டார்ஸ் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிலையில், புதிய வருடத்துக்கான தலைவராக மார்ட்டீன் ஜெயகாந் பதவியேற்றுக் கொண்டார். கழகத்தில் புதிய அங்கத்தவராக இணைத்துக்கொள்ளப்பட்ட  றிச்சர்ட் நிக்சனுக்கு அங்கத்துவச் சின்னமும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்திய சான்றிதழும் வழங்கப்பட்டன.
லயன்ஸ் கழத்தில் பல வருடங்களாக சேவையாற்றிய மூத்த உறுப்பினர் ஜேம்ஸ் சாமிநாதர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில்  3 பாடங்களிலும் அதி விசேட சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 7ஆவது நிலையை வர்த்தகப் பிரிவில் பெற்றுக்கொண்ட கட்டைபறிச்சானைச் சேர்ந்த சுந்தரலிங்கம்  அனார்த்தனனும் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் லயன் மாவட்ட ஆளுநர் தேசபந்து பா.ஜனரஞ்சன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X