2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கணிதப் பாசறை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ-.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவு அனுசரணையுடன் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் நடத்தும் கணிதப் பாசறை இன்று திங்கட்கிழமை காலை கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், சிறப்பு அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கணிதப் பாசறையில் கிண்ணியா வலயக கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை கோட்ட பாடசாலைகளில் உள்ள ஆரம்பக் கல்வி மாணவர்களின் ஆக்கங்கள் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X