2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு ஆளுநரின் அதிகாரம் தடையாகவுள்ளது: நஸீர் அஹமட்

Super User   / 2013 ஜூலை 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன், வடமலை ராஜ்குமார்


கிழக்கு மாகாண ஆளுநரின் அதிகாரம் எமக்கு தடையாகவுள்ளது என மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் நேற்று திங்கட்கிழமை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சரவை கூட்டங்களை முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய மாகாண அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பகிஷ்கரித்து வந்த நிலையிலேயே நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் நேற்று இரவு எட்டு மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றதாக முதலமைச்சரின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.மன்சூர். ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் விமலவீர திசநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி தமக்களித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண இந்த கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து மாகாண அமைச்சு செயலாளர்களின் முக்கிய கூட்டமொன்றும் இன்று காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றுள்ளது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண அமைச்சா்கள்அனைவரும் கலந்துகொண்டனர். இதன்போதே மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"கிழக்கு மாகாண சபையினால் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி அபிவிருத்தி அடைந்த மாகாணமாக மாற்றவதற்கு ஐனாதிபதி மற்றம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சா் ஆகியோர் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சிலஅதிகாரிகள் தடையாக இருக்கின்றனர். குறிப்பாக மாகாண ஆளுநரின் அதிகாரம் எமக்கு தடையாகவுள்ளது.  இந்த மாகாண சபை இல்லாத கால கட்டத்தில் எவ்வாறு ஆளுநர் நிர்வகித்தாரோ அதைப்போல  இன்றும் முற்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்றார்.

"நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் மக்கள் பணியில் ஆா்வத்துடனுமே இருக்கின்றோம்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரு மாதங்களாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாகாண சபை அமர்வுகளையும் பகிஷ்கரித்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X