2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

ஹமீதியா நகர் வீதியை புனரமைப்பு செய்ய நடவடிக்கை

Super User   / 2013 ஜூலை 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகர் வீதியை கொங்கிறீட் கல் பதித்து புனரமைப்பு செய்வதற்கு தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த வீதியானது ஹமீதியா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஹமீதியா ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றுக்கு செல்வதற்கான மிக முக்கிய வீதியாகும். எனினும் இந்த வீதியானது  நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்ததோடு அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினாலும் மிக மோசமாக சேதமடைந்தது.

இதனால் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான், குறிப்பிட்ட வீதியினை கொங்கரீட் கல் பதித்து புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .