2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண அபிவிருத்தி பற்றிய உயர்மட்ட மாநாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன்
, ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண அபிவிருத்தி பற்றிய உயர்மட்ட மாநாடு திருகோணமலை வரோதயாநகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலக மாநாட்டு மண்டபத்தில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மாகாணத்தின் 42 பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் நஜீப்,

'கிழக்கு மாகாணம் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் பார்க்க பல்வேறு துறைகளிலும் அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இதற்குக் காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலேயாகும்.

எமது அரசமைப்பில் மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி என்று மூன்று நிர்வாக இயந்திரங்கள் உள்ளன.

அவை அனைத்தும் ஒன்றிணைந்து நாட்டின் அபிவிருத்திக்காக முரண்பாடுகள் இன்றி உழைக்க வேண்டும்.

அபிவிருத்தி பங்களார்கள் ஒன்றுபட்டு உழைப்பதன்மூலமே இது சாத்தியமாகும் என்று கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .