2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை தையல் இயந்திரம்,இடியப்ப இயந்திரம், அரைக்கும் இயந்திரங்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு,கிழக்கு இணைப்பாளர் ஏ.Nஐசுதாசன் ஏற்பாட்டிலேயே இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பட்டனமும்,சூழலும்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒன்பது கிராமங்களைச்சேர்ந்த 35 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண்களும் அடங்குவதாகவும் திருமலை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை ஊக்குவிக்கும் அதிகாரி செல்வி சன்ஐh தெரிவித்தார்.

அத்துடன் அடுத்தமாதம் 107 பேருக்கு ஆடு, கோழியும் கூடும்,வலையும், தோனியும், வழங்க உள்ளதுடன் விவசாய உபகரணங்கள் வழங்க தீர்மாணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .