2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வீடு தீக்கிரை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா,  கற்குழிப் பகுதியிலுள்ள் வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.

கற்குழி அப்துல் றகீம்- றசீதுகான் என்பவரின் வீடே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளது.
இவரின் வீட்டில் உள்ள பிள்ளையொன்றுக்கு திடீர் சுகவீனம் ஏற்படவே இவ் வீட்டிலிருந்த அனைவரும் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த வேளையில் வீட்டின் அடுப்பிலிருந்து தீ பரவியுள்ளது.

இதனால் வீட்டுக் கூரை, வீட்டிலிருந்த பொருட்கள் உட்பட சுமார் 5 இலட்சம் ருபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பாக வாணாறு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .