2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

பாய்ந்த யுவதியை பாய்ந்து காப்பாற்றிய பொலிஸார்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆற்றில் பாய்ந்த 22 வயதான யுவதியை பொலிஸாரும் உடனே பாய்ந்து காப்பாற்றிய சம்பவமொன்று வெருகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெருகல் ஆற்றில் இன்று வெள்ளிக்கிழமை பாய்ந்த யுவதியே உடனடியாக காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வெருகல் பாலத்திற்கருகில் கடமையிலிருந்த பொலிஸார் அந்த பாலத்தின் மேலால் யுவதியொருவர் அங்குமிங்குமாக நடமாடித் திரிந்ததை அவதானித்துள்ளனர்.

அவ்வாறு நடமாடித்திரிந்த யுவதி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் திடீரென குதித்துள்ளார். இதனையடுத்து  உடனடியாக ஆற்றில் குதித்த பொலிஸார் தத்தளித்துக் கொண்டிருந்த யுவதியை காப்பாற்றிக் கரைசேர்த்துள்ளனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள்களான எஸ்.கே. ஹேரத் மற்றும் ஜீ.எல். சன்ஜீவ ஆகியோரே இந்த யுவதியைக் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றிய யுவதிக்கு பொலிஸார் முதலுதவியளித்து உறவினர்களிடம் ஒப்படைத்ததையடுத்து அந்த யுவதியை கதிரவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் அவர்  தற்சமயம் தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் பாய்ந்து பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட யுவதி கதிரவெளி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவரென்று  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .