2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மாவட்ட செயலருக்கு அழைப்பாணை

Super User   / 2013 செப்டெம்பர் 18 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட செயலாளரை மன்றில் ஆஜராகுமாறு குச்சவெளி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புல்மோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நில அளவைக்கு எதிரான மனு இன்று திங்கட்கிழமை திருகோணமலை நீதவானுமான எஸ்.சசிதரன் முன்னிலையில் குச்சவெளி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பூஜாபூமி மற்றும் தொல்பொருள் என்ற போர்வையில் காணிகளை அளவையிடுவதற்கான கட்டளையை பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர்.

எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காத காரணத்தால் திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் டி.ஆர்.டி.சில்வா மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நிலத்தினையும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் அளவைக்கான அனுமதியை வழங்க முடியாது எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .